Times of Puducherry

ஓவியக் கண்காட்சியை ரங்கசாமி தொடங்கிவைத்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 3:02 PM
painting-exhibition-cm-inaugurated

இன்று முதல் நவம்பர் 1, 2026 வரை நடைபெறவுள்ள இந்த ஓவியக் கண்காட்சியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார் இன்று முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

அரோவில்லில் ‘ஊக்கமளிக்கும் உத்வேகம்’ சாதனை கண்காட்சி மற்றும் WHISPERS OF AUROVILLE & PUDUCHERRY ஓவியக் கண்காட்சியினை
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அரோவில்லில் உள்ள பாரத் நிவாஸ், கலா கேந்திராவில், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் 15-வது ஆண்டு விழா மற்றும் உலகெங்கிலும் உள்ள சாதனைகள் குறித்த கண்காட்சியை முன்னிட்டு, ‘ஊக்கமளிக்கும் உத்வேகம்’ (Inspiration to Inspire) என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓவியக் கண்காட்சியை ரங்கசாமி தொடங்கிவைத்தார்

இந்த நிகழ்ச்சியைபுதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவிற்கு விஜிபி குழுமத் தலைவர் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம் தலைமை வகித்தார். பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜன்மஜெய் மொஹந்தி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி டாக்டர் வி. முத்து, சமூக ஆர்வலர் ஆர்.இ. சேகர், தட்சிணாமூர்த்தி – தமிழ்ச் சங்கம் பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலகம் முழுவதும் 204 திருவள்ளூவர் சிலைகள் VGP உலக தமிழ் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது – இதனை பாராட்டி புதுச்சேரி அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் கேடயத்தை முதல்வர் ரங்கசாமி திருக்கரங்களால் தலைவர் விஜிபி குழுமம், நிறுவன தலைவர் VGP உலகத் தமிழ் சங்கம் கலைமாமணி Dr. VG . Santhosam அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் ROTARY CLUB OF TRICHY மேட்ரிக்ஸ் சார்பில் பிரியா குழுவினரின் ICON OF INSPIRATION விருதும் VGP உலகத் தமிழ் சங்கம் சார்பில் நற்றமிழ் விருதும் டாக்டர் ராஜேந்திரனுக்கு முதல்வர் ரங்கசாமி திருக்கரங்களால் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. ஓவியக் கலைஞரும், 2007-ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தவருமான ஆர். ராஜேந்திரன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இவர் புதுச்சேரியில் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார்.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, ‘அரோவில் மற்றும் புதுச்சேரியின் ரகசியக் குரல்கள்’ (Whispers of Auroville & Puducherry) என்ற கருப்பொருளில் அமைந்த ஓவியங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. கலைஞர் ஆர். ராஜேந்திரனின் படைப்பாற்றல் பயணம், கலைப் பார்வை மற்றும் கலை வழியாக மற்றவர்களை ஊக்குவிக்கும் அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.

விழாவில் கலைச்செம்மல் ராகவன் என்., சமூக ஆர்வலர் ஓம் சக்தி ரமேஷ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், கலை இயக்குநர் ரெமியன், புதுச்சேரியைச் சேர்ந்த சிறந்த ஓவியர் விருது பெற்ற கலைமாமணி சுகுமாரன், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்றனர்.

மேலும் ஓவியர்கள் அன்பழகன், கந்தப்பன், முனுசாமி ஆரோவில் சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 12 முதல் நவம்பர் 1, 2026 வரை நடைபெறவுள்ள இந்த ஓவியக் கண்காட்சியை, தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். கலை, படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய சாதனைகளை ஒருங்கிணைக்கும் இக்கண்காட்சி, கலை ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top