Times of Puducherry

மின் இணைப்பு: குடிநீர் இணைப்புக்கு என்ஓசி வழங்குவதில் காலதாமதம் - வே. கார்த்திகேயன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 8:10 PM
noc-for-eb-drinking water-connection-delay

மின் இணைப்பு குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு என்ஓசி வழங்குவதில் காலதாமதம் ஆகிறது இதனால் அன்றாட தேவைக்கான மின் இணைப்பு குடிநீர் இணைப்பு வாங்குவதில் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில்:

புதுச்சேரியில் புதிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) கட்டாயம் என்ற அரசாணையால் பொதுமக்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன் துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தார்.

பணி நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் வணிக உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கடந்த சில மாதங்களாக புதிய மின் மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியின் நிலப்பரப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சிறிய வீடுகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு உரிய தளர்வுகளை வழங்கி, அரசாணையை மறுபரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top