Times of Puducherry
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி மூன்று நாட்களாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காணாமல் போன சிறுமியை 3வது நாளாக போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், எந்த வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்தவர் வடிவேல்,45; கூலி தொழிலாளி. இவரது 7 வயது மகள் ஆலம்பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, கடந்த 11ம் தேதி இரவு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலை 6:00 மணிக்கு பார்த்த போது காணாமல் போய் இருந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குபதிந்தனர். எஸ்.பி.மதிவாணன் தலைமையில் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் செஞ்சி இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், அனந்தபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, அவலுார்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆதியோர் தலைமையில், 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இது மட்டும் இன்றி சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய தனி குழுவும், டிரோன் கேமராக்கள் மூலம் காடு, மலைகளில், தேடுவதற்கு தனி குழுவும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். இவர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் ஆலம்பூண்டி, திக்காமேடு, ரெட்டிபாளையம், நடுப்பட்டு, கூடப்பட்டு, மங்களாவரம் பகுதியில் உள்ள மலைகள், காடுகள், ஏரி, குளங்கள், விவசாய கிணறுகளில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும், சுற்று வட்டார கிராம சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் மேற்கொண்டு விசாரணை நடத்துவதில் முன்னேற்றமின்றி போலீசார் திணறி வருகின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.