Times of Puducherry

தேசிய விளையாட்டு தினம் விழா - ஆளுநர் உரை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 8:43 PM
national-sports-day-celebrated-in-puducherry

தேசிய விளையாட்டு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்கப்படுத்துவதற்காக இந்த விழா நடைபெறுகிறது. இளைஞர்களின் உழைப்பு, விடாமுயற்சி, மன வலிமை இதைதான் இந்த விழா பிரதிபலிக்கிறது. இங்கே பரிசுகளைப் பெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

தேசிய விளையாட்டு தினம் விழா - ஆளுநர் உரை

நீங்கள் பெற்று இருக்கும் இந்த வெற்றிக்குப் பின்னால் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் TEACHERS, COACHES உங்களுக்கு துணையாக இருக்கும் உங்களுடைய பெற்றோர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, நம்பிக்கை மறைந்து இருக்கிறது. வெற்றி பெற்றவர்களை பாராட்டுவது மட்டுமல்ல. வெற்றி பெறப் போராடிய வீரர்களையும் ஊக்குவிப்பதுதான் விளையாட்டின் பண்பாடு. இந்த விழாவின் நோக்கமும் அதுதான்.

தேசிய விளையாட்டு தினம் விழா - ஆளுநர் உரை

சுமார் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட உலக அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா தங்கம் வாங்காதா என்ற ஏக்கமும், எதிர்ப்பார்ப்பும் நமக்கு இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக அந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இந்திய விளையாட்டு வீரர்கள் தேசிய-சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். PARIS-இல் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்ப்பிக் போட்டியில் கூட இந்தியா 29 பதக்கங்களை வென்றது. வீரர்கள் தங்களுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் உலகத்தையே ஆச்சரியப்பட வைத்தார்கள்.

தேசிய விளையாட்டு தினம் விழா - ஆளுநர் உரை

இப்போது SEPTEMBER-OCTOBER மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிள் இந்தியா 21 தங்கம் 27 வெள்ளி 37 வெண்கலப் பதக்கங்கள் என்று மொத்தம் 85 பதக்கங்கள் வென்றது. 45 நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவில் இருந்து 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள். பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இதில் முக்கயமான ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். பதக்கம் வென்ற- தடகள விளையாட்டு (ATHLETICS), கபடி (KABADI), மல்யுத்தம் (WRESTLING), குத்துச் சண்டை(Boxing), துப்பாக்கி சுடுதல் (Shooting), வில்வித்தை (ARCHERY) போன்றவற்றில் கிராமப் பகுதியில் இருந்து போனவர்கள்தான் பதக்கம் ஜெயித்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் அதிகம் சாதித்து இருக்கிறார்கள்.

நகர்ப்புற விளையாட்டுகளான TENNIS, SHUTTLE, BATMINTON, SQUASH, SWIMMING (நீச்சல்) போன்ற போட்டிகளில் நாம் பதக்கம் பெறவில்லை. அதனால் நகர்புறத்தில் இருக்கும் இளைஞர்களும் இன்னும் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில், நம்முடைய விளையாட்டு வீரர்களின் உழைப்பு, முயற்சி, TEAM SPIRIT நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறது. பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து பாராட்டினார். மிகப்பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டு வந்த KHELO INDIA திட்டம் ஒரு முக்கிய காரணம். விளையாட்டுத் துறையை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக KHELO INDIA திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கமே, நகரங்களில், கிராமங்களில் – இளைஞர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமைகளை கண்டுபிடித்து- அவர்களுக்கு தேவையான பயிற்சி, விளையாட்டு வசதிகள், போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதுதான். அதற்காக பள்ளி-கல்லூரி அளவில், மண்டல அளவில், மாநில-தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. SPORTS CENTRES, COACHING ACADEMY-கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்களிடம் இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை, திறமைகளை அடையாளம் கண்டு, அதை வளர்த்து, தேசிய- சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதுதான் இந்த KHELO INDIA திட்டத்தின் அடிப்படையான நோக்கம். அதை ஒட்டித்தான் ‘KHELO புதுச்சேரி’ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. விளையாட்டு ஆர்வமுள்ள ஒவ்வொரு இளைஞரையும் ஊக்கப்படுத்தி சாதனையாளர்களாக உருவாக்குவது தான் ‘KHELO புதுச்சேரி’ இயக்கத்தின் உண்மையான நோக்கம்.

இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கும் மனநிலை இப்போது மாறிவிட்டது. இந்த அணுகுமுறையை நாம் வளர்த்து எடுக்க வேண்டும். ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு துறையில் அனுபவம் உள்ளவர்கள் இதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். விளையாட்டுத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குத்தொகை வழங்குவது, நகர- கிராமப் பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்துவது, விளையாட்டில் சாதனை செய்யும் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவது அனைத்தையும் இந்த அரசு செய்து வருகிறது.

தனியார் நிறுவனங்களும் தங்களுடைய CSR திட்டங்கள் மூலமாக விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க வேண்டும். சமீபத்தில், CSR நிதியை விளையாட்டு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை அப்படி இல்லை. விளையாட்டத்துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஊக்கமளிக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இன்று இந்த விழாவில் பரிசு பெறும் நீங்கள் உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுடைய சாதனை மற்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். உங்களுக்கு பின்னால் வரும் இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் தேசிய அளவில், உலக விளையாட்டு அரங்கில் சாதனைகள் படைக்க வேண்டும். அதற்கான ஊக்கத்தை அரசு தரும். நீங்கள் நாட்டிற்கும் புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை முடிக்கிறேன். புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 38 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சென்ற வாரம் ஒப்புதல் அளித்திருக்கிறேன். தற்போது பள்ளிகளில் உள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top