Times of Puducherry

ஜிப்மர் மருத்துவமனையில் மாநில அளவிலான முஸ்கான்(MusQan) மாநாடு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 3:25 PM
MusQan-state-level-conference-held-in-jipmer

தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான ஜிப்மர் தயாராக உள்ளது என மாநில அளவிலான முஸ்கான் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்

ஜிப்மர் மருத்துவமனையில் மாநில அளவிலான முஸ்கான் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஜிப்மர் செவிலியர் சேவைகள் துறை, தேசியத் தர உறுதிப்பாட்டுத் தரநிலைகள் (NQAS) தரக்குழு ஜிப்மர் குழந்தைகள் நல மருத்துவத் துறை பச்சிளங்குழந்தைகள் மருத்துவத் துறையுடன் இணைந்து, குழந்தைகள் நலச் சேவைகளுக்கான தேசியத் தர மேம்பாட்டுத் திட்டமான முஸ்கான் (MusQan) மாநில அளவிலான மாநாடு ஜிப்மாரில் நடந்தது.

ஜிப்மர் மருத்துவமனையில் மாநில அளவிலான முஸ்கான்(MusQan) மாநாடு

முஸ்கான் தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான ஜிப்மரின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக மாநாடு நடத்தப்பட்டது இதில்
100 செவிலியர்கள் பங்கேற்று, முஸ்கான் தரநிலைகள் குறித்த தங்களது புரிதலை மேம்படுத்திக் கொண்டனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) செப்டம்பர் 2021-இல் தொடங்கப்பட்ட முஸ்கான் (Mothers Absolute Affection / Quality Improvement Initiative) திட்டம், தேசியத் தர உறுதிப்பாட்டுத் தரநிலைகளின் (NQAS) கட்டமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள
பொது சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் உயர்தர மருத்துவச் சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்முயற்சி குறித்துப் பேசிய ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, முஸ்கான் தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதில் திறன் மேம்பாட்டுப்
திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்றுதல், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) செயல்படுத்துதல், தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் முறையான மருத்துவ ஆவணங்களைப் பராமரித்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் இத்தகைய பயிற்சிகள், வழிகாட்டுதல்களை நேரடியாக நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளில் திறம்பட நடைமுறைப்படுத்த உதவுவதுடன், தரச்சான்றிதழ் மதிப்பீட்டிற்கான நிறுவனத்தின் தயார்நிலையை மேம்படுத்தி, தொடர்ச்சியான தர உயர்வுக்கும் வழிவகுக்கின்றன என பேசினார்.

இம்மாநாட்டின் முஸ்கான் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஜிப்மரால் தயாரிக்கப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான (WCH) நிலையான செயல்பாட்டு நடைமுறை கையேடு (SOP Manual) வெளியிடப்பட்டது. மருத்துவச் சேவைகளில் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றுதல், சிகிச்சை வழங்குவதில் சீரான தரத்தை உறுதி செய்தல் மற்றும் தரநிலைகளைத் தொடர்ந்து செயல்படுத்த மருத்துவப் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றை தி கையெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதை
ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் குழந்தைகள் நல மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் குணசேகரன் தண்டபாணி, பச்சிளங்குழந்தைகள் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் முருகேசன், செவிலியர் சேவைகள் பொறுப்பு அலுவலர் புஷ்பலதா மற்றும் செவிலியர்
கண்காணிப்பாளர், தர மேலாளர் செங்கமலர்செல்வி எம். ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப அமர்வுகளில் தேசியத் தர உறுதிப்பாட்டுத் தரநிலைகள் (NQAS) மற்றும் முஸ்கான் தரச்சான்றிதழ் நடைமுறைகள், குழந்தைகளுக்கு உகந்த மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட மருத்துவச் சேவைகளுக்கான பயனுள்ள தகவல் தொடர்பு, தேசிய
குழந்தைகள் நலத் திட்டத்தின் (RBSK) கீழ் குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், பச்சிளம்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவூட்டல் நடைமுறைகள், பிறந்த குழந்தைகள் மற்றும் குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு, தீவிரமான பச்சிளங்குழந்தை மருத்துவ நிலைகளைக் கையாளுதல் மற்றும் பிறந்த குழந்தைகளிடம் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஜிப்மர் மற்றும் எம்.டி.பி.ஜி.ஆர்.ஐ.எச்.எஸ். (MTPGRIHS) செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் இப்பயிற்சி அமர்வுகளை நடத்தினர்.
இதன் மூலம், தாய்மார் மற்றும் குழந்தைகள் நலச் சேவைகளில் தரநிலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறை சார்ந்த அறிவை பங்கேற்பாளர்கள் பெற்றனர். தர உறுதி நடைமுறைகளை வலுப்படுத்துதல், மருத்துவப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அன்றாட மருத்துவச் சேவைகளில் நோயாளிகளின் பாதுகாப்பையும் தர மேம்பாட்டையும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் ஜிப்மரின் உறுதிப்பாட்டை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்தியது.

தொடர்ச்சியான பயிற்சிகள், தரப்படுத்தப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மற்றும் முறையான தரக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம், முஸ்கான் தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான தனது தயார்நிலையை மேம்படுத்துவதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் மருத்துவ நலன்களை மேலும் உயர்த்துவதற்கான முயற்சிகளையும் ஜிப்மர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top