Times of Puducherry
கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அடுத்த கரிக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 24). இவர் இன்று மாலை அபிஷேகபாக்கம் சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் தவளகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. அதில் முகத்தில் பல இடங்களில் கத்தி வெட்டு விழுந்தது. அவர் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பரண்டு போக்குவரத்து ஜிந்தா கோதண்டராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சக்தியநாராயணன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முதலியார்பேட்டை பாம் ரவி கொலை வழக்கில் தொடர்புடையவர். இவருக்கு திருமணம் ஆகி சில நாட்களில் ஆகின்றது எனவும் போலீசார் தெரிவித்தனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவளகுப்பம் – அபிஷேகபாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் விதமாக அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம்ம மற்றும் பாகூர் பகுதி சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கொலையுண்ட பிரவீன்குமாரின் மனைவி, தாய் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் அந்த இடத்தில் வந்து கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து ரத்த மாதிரியை சேகரித்தனர். கொலை நடந்த பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.