Times of Puducherry
ஆயுத பூஜை அன்று சாலைகளில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் உழவர் கரை நகராட்சி எச்சரிக்கை செய்து உள்ளது இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
ஆயுத பூஜை பண்டிகை பொதுமக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு, பொதுமக்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பூஜைகள் செய்து, திருஷ்டிக்காகப் பூசணிக்காய்களைச் சாலைகளில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதால், அவற்றின் மீது வாகனங்கள் ஏறும்போது வழுக்கி, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆயுத பூஜையைக் கொண்டாடும் பொதுமக்கள் அனைவரும்,சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதைத் தவிர்க்குமாறு உழவர்கரை நகராட்சி அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
மேலும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெகிழியால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், நெகிழிக் கேரி பைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் உழவர்கரை நகராட்சி கேட்டுக்கொள்கிறது. பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆயுத பூஜையைக் கொண்டாடுவோம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.