Times of Puducherry
புதுச்சேரி காலாபேட் தொகுதி நாவற்குளம் அரசு ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டிடத்தை ராஜ் சபா எம்பி செல்வ கணபதி இன்று திறந்து வைத்தார்.
புதுச்சேரி காலாபேட் தொகுதி நாவற்குளம் அரசு ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் சு. செல்வகணபதி கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.33,38,000/- (ரூபாய் முப்பத்து மூன்று லட்சத்து முப்பத்தெட்டாயிரம்) வழங்கி புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்க உத்தரவு உத்தரவிட்டார்
இதற்கான திறப்பு விழா இன்று காலை சுமார் 11.00மணியளவில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் . சு. செல்வகணபதி தலைமையில் திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு அற்பனித்தார். இந்த விழாவில் காலாபேட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்ரமேஷ் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.