Times of Puducherry

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்தில் ரூ. 750 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 9:29 PM
modi-inagurates-railway-flyovers-tamilnadu

தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், புதிய ரயில் இணைப்பு மற்றும் மூன்று ரயில் வளைவுப் பாலங்கள் (ஃப்ளையோவர்கள்) ஆகியவை அமையப் பெறுகின்றன. இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11, 2026) தமிழகத்திற்கு வருகை தருகிறார் ரூபாய் 750 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துத் தொடங்கி வைக்கிறார்.

சுமார் ரூ. 750 கோடி மதிப்பிலான இந்த ரயில்வே திட்டங்கள், மாநிலத்தில் பயணியருக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், ரயில் இணைப்பை வலுப்படுத்துவதற்கும் மற்றும் ரயில் வலையமைப்பின் திறனை அதிகரிப்பதற்கும் வழிவகை செய்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்தில் ரூ. 750 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ. 70 கோடிக்கும் அதிகமான மொத்த செலவில் ஐந்து புனரமைக்கப்பட்ட நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 23 கிலோமீட்டர் நீளமுள்ள காரைக்கால் – Peralam (பெரளம்) ரயில் பாதையானது ரூ. 550 கோடிக்கும் அதிகமான செலவிலும், மூன்று ரயில் வளைவுப் பாலங்கள் ரூ. 120 கோடிக்கும் அதிகமான செலவிலும் கட்டப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி

நாளை சென்னை வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top