Times of Puducherry
புதுடெல்லியில், PRS Legislative Research சார்பில் 2026 அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த தேசியப் பயிலரங்கம் நடக்கிறது இதில் புதுச்சேரி சேர்ந்த எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . வையாபுரி மணிகண்டன், கே கே ஆறுமுகம் உள்பட எம்எல்ஏக்கள் பங்கேற்று வருகிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிலரங்கில், உள்கட்டமைப்புத் திட்டமிடல், மேம்பாடு, செயல்படுத்துதல் மற்றும் தொடர்புடைய கொள்கைகள் குறித்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அமர்வுகள் நடைபெறுகின்றன.
மேலும், இப்பயிலரங்கில் பங்கேற்பதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சிறந்த நடைமுறைகளை எம்எல்ஏக்கள் அறிந்துகொள்வதோடு, பிற மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.
இப்பயிலரங்கில் பெறும் அனுபவங்களையும் புதிய கருத்துகளையும் முத்தியால்பேட்டை தொகுதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதே நோக்கமாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.