Times of Puducherry
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் .N.ஆனந்த் , சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற குறைதீர்ப்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் குறைகளை முதல்வரிடம் எடுத்துக் கூறி மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்
விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. விவசாயிகளின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .ஆதவ் அர்ஜுனா அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், போக்குவரத்துத் துறை அமைச்சர் A.விஜய் தமிழன் பார்த்திபன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் M.விஜய் பாலாஜி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ், கூட்டுறவுத் துறை அமைச்சர் V.காந்திராஜ் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் .R.வினோத் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .C.ரமேஷ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் க.மாரிமுத்து, டாக்டர் எம்.சுதாகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.