Times of Puducherry

புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் அமைந்துள்ள கைலாசா ஆதீனத்தில் ஆயுத பூஜை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 9:18 PM
kailasha-temple-in-embalem-observed-ayudapooja-where-namasivayam-joined

கைலாசாவில் இருந்து காணொலியில் தோன்றிய நித்யானந்தா பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

புதுச்சேரி ஏம்பலம் புதுவை ஆதீனம் கைலாசா நித்தியானந்தா ஆசிரமத்தில் நவராத்திரி கொலு விழா மற்றும் ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் அமைந்துள்ள கைலாசா ஆதீனத்தில் ஆயுத பூஜை

விழாவின் முக்கிய நிகழ்வாக, கைலாசாவிலிருந்து காணொலி நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ மோகன்தாஸ் மற்றும் பக்தர்களை வரவேற்று அருளாசி வழங்கினார்.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் அமைந்துள்ள கைலாசா ஆதீனத்தில் ஆயுத பூஜை

இதைத்தொடர்ந்து, கைலாசா புதுச்சேரி தலைவர் விநாயகம் மற்றும் பக்தர்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, சால்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமி நித்தியானந்தா எழுதிய ஆன்மிகப் புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் எம்எல்ஏ மோகன்தாஸ் ஆகியோர் பக்தர்கள் மற்றும் மகளிருக்கு நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பெண்களுக்கு ஜாக்கெட் பிட் மற்றும் மங்களப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்புகளையும் வழங்கினர்.

விழாவில் ராஜராஜேஸ்வரி அம்மன், மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சிறப்பு கொலு பூஜைகள், குழந்தைகள் வழிபாடு, கன்னிப்பெண் பூஜை, சுமங்கலி பூஜை, பாதபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றன. புதுச்சேரி, ஏம்பலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top