Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 9:56 PM
mla-ashok-anand-gratitued-thattanchavadians-for-electing-him

தட்டாஞ்சாவடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற ஆதரவும், வாக்குகளும் அளித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பேட்டை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.

அப்போது, தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடுவதாக உறுதியளித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top