Times of Puducherry

தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 9:20 PM
member-of-national-commission-with-various-orgn-consultation

தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினருக்குப் புதுச்சேரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு வருகை தந்த தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜாதோத்து ஹுசைன் மற்றும் அவருடன் வந்த குழுவினருக்குப் புதுச்சேரியில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேல், அரசு செயலர் முனைவர் முத்தம்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன், கலைவாணன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன், மக்கள் தொடர்பு அதிகாரி வசந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து வழங்கியும் அவர்களை வரவேற்றனர்.

தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top