Times of Puducherry

மழையால் சேதம் அடைந்த 48 வீடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து கட்டித் தரப்படும் என அமைச்சர் ஆனந்த் உறுதளித்துள்ளார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 10:27 PM
anand-assured-building-48-houses-damaged-during-mansoon-rain

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான N. ஆனந்த், சென்னை அசோக் நகர் நல்லான் குப்பம் பகுதியில் உள்ள 131-வது வட்டத்திற்குட்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில், A மற்றும் B பிரிவுகளைச் சேர்ந்த 48 குடியிருப்புகள் மிகவும் சேதமடைந்துள்ளதை அறிந்து, அக்குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். மேலும் அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

சேதமடைந்துள்ள 48 குடியிருப்புகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் விரைந்து மறுகட்டமைப்புச் செய்து, அங்கு வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துத் தருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் உறுதியளித்தார். இதனுடன் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையையும், ரூபாய் 25,000 காசோலையையும் வழங்கினார்.

மழையால் சேதம் அடைந்த 48 வீடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து கட்டித் தரப்படும் என அமைச்சர் ஆனந்த் உறுதளித்துள்ளார்

மேலும் அப்பகுதி மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளையும் கவனமாகக் கேட்டறிந்த அமைச்சர் பிரச்சினைகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

மழையால் சேதம் அடைந்த 48 வீடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து கட்டித் தரப்படும் என அமைச்சர் ஆனந்த் உறுதளித்துள்ளார்

பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, சேதமடைந்த குடியிருப்புகளை மறுகட்டமைப்புச் செய்து, மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் உறுதியளித்தார்.

சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், அரசு அலுவலர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top