Times of Puducherry
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு, தமது சார்பிலும் புதுச்சேரி மக்களின் சார்பிலும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து முதலமைச்சர் ந. ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், அமித் ஷா அவர்கள் நீடித்த மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையும், வலிமையான, பாதுகாப்பான, வளமான பாரதத்தை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.