Times of Puducherry
தமிழ்நாடு விவசாய சங்கங்கள், வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு பயிர் கடன் முழுவதும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவெறும்பூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக ஒன்றிய அரசு அறிவிக்கவேண்டும், பயிர்க்கடன் முழுவதும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி நிவராணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாயும், விவசாய தொழிலாளர்களுக்கு 10000 ரூபாயும் வழங்கவேண்டும், வேளாண்மை செய்த, செய்யாத நிலங்களுக்கு பயிர்க்காப்பீடு செய்வதற்குரிய நடவெடிக்கை எடுக்கவேண்டும், மின்சார இணைப்புக்கேட்டு தக்கல் முறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கவேண்டும், ஆடு, மாடுகளுக்கு குடிநீர் தேவைகளுக்காக வட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பித்தர வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி நிவராணம் வழங்குவதற்காக விவசாய சங்க பிரநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசவேண்டும், இலவச மின்சாரத்தை ஒழித்துகட்டும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் கடைவீதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு சேர்ந்த பிரதிநிதிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் தலைமையிலான போலீசார் கைது செய்து திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் இந்த போராட்டங்கள் நடைபெறுவதாக தேர்தலுக்கு முன்பு தற்போது தமிழக அரசு விவசாயிகளை பாதுகாப்போம் என்று கூறினார்கள். மேலும் 5 ஏக்கர் வரை உள்ள சிறுகுறு விவசாயிகளின் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.
இந்த நிலையில் அதை நம்பி நாங்களும் வாக்களித்தோம் அவர்கள் வெற்றி பெற்றுஆட்சி அமைத்தனர். இதனை தொடர்ந்து ரூ 50, ஆயிரம் வரை கடன் பெற்றவிவசாயிகளுக்கு 35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தனர் இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
விவசாயிகள் தொடர் போராட்டத்தால் ரூ. 75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தனர். அதையும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளாததை தொடர்ந்து ஒரு லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் கடந்தவர்களுக்கு 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி எனவும் அறிவித்தனர். இதனால் தான் விவசாயிகள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் விவசாய சங்கத்தினர் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒரு லட்சம் வரை அனைத்து விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியதாகவும், ஆனால், இப்போ அப்படி செய்யவில்லை என்பதால், தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இல்லை விவசாய கடனை வசூல் செய்யாமல் தற்பொழுது நிறுத்துகிறோம், 22ஆம் தேதி அறிவிப்பு வரும் என கூறுகிறார்கள்.தமிழக முதல்வர் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிவடவில்லை, பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ்களை வைத்து பயிர் காப்பீடு செய்வதற்கு தமிழகத்தில் அறவுறுத்தி உள்ளது. பயிர் காப்பீடு செய்யப்படும் பொழுது ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் மட்டுமே கிடைக்கும், இது பத்தாது, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணமும், தொழிலாளர்களுக்கு ரூ10,000 வழங்க வேண்டும்.
ஒன்றியஅரசு சொல்வதாக கூறி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாநில அரசு கணக்கு எடுப்பது இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதற்கான முயற்சியாகும்.
இதனை அன்றைய திமுக அரசு இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலும் இந்ததிட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு ஐந்து மாநிலங்களில் வறட்சி பாதித்த மாநிலங்கள் அறிவித்துள்ளது தமிழகத்தை அறிவிக்க வேண்டும் கடந்த மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி கலெக்டர் தண்ணீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படும் மழை வந்தாலும் பாதிப்பு ஏற்படும் தண்ணீர் வரவில்லை என்றாலும் பாதிப்பு ஏற்படும் அதநாள் யாரும் விவசாயம் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள் எனவே தமிழக அரசு எங்களது இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.