Times of Puducherry
கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர் தியாகத்தை: கடல் அலைகள் கண்ணுக்கு தெரியும் இவ்விடத்திலிருந்து நாம் இன்று நினைவு கூறுவோம் உனது வருங்காலத்திற்காக என் தற்காலத்தில் இயன்றேன்: நாளை உன் விடியலுக்கா இன்று நான் மடிய தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவலர் குடும்பத்தின் எண்ணிக்கை 154 அவர்களின் தியாகத்தை நாம் போற்றுவோம்.
விழுப்புரத்தில் காவலர் வீரவணக்க நாளில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மதிவாணன் பணியின் போது உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு புகழாரம் செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளான இன்று பணியின் போது உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் அர.அருள்ளரசு., விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞானவேல், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சண்முகம், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டு கடந்த ஆண்டில் 2025-2026 தமிழ்நாட்டில் (6) ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், ஐந்து தலைமை காவலர்கள் உட்பட இந்தியாவில் 154 காவல் ஆளிநர்கள் பணியின்போது உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்கள்.
கடலூர் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி, சிறைத் துறை கண்காணிப்பாளர் பரசுராமன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. அப்பாண்டைராஜ், தமிழ் இனியன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அகிலன், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்கள் அறிவழகன், முரளிதரன், காவல் ஆய்வாளர் திருமதி. இளவரசி, கடலூர் சரக வன அலுவலர் திரு. திலகராஜ், உதவி ஆய்வாளர் நடராஜன், தலைமை காவலர்கள் மதன்குமார், நிவேதா, பெண் காவலர் சசிகலா ஆகியோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.