Times of Puducherry
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :
தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவன் தங்களுக்குச் சிறந்த ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர் வெற்றிகளை வழங்கி, தனது அளவற்ற அருளையும், ஆசீர்வாதங்களையும் பொழிய வேண்டுகிறேன்.
பாரத மாதாவின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, தேசியப் பாதுகாப்பின் மீதான தங்களது உறுதிப்பாடு மற்றும் இந்திய மக்களுக்காக ஆற்றும் சேவை ஆகியவை தேசப்பற்றின் உணர்வை தூண்டி, வளமான மற்றும் தற்சார்பு பாரதத்தை உருவாக்கும் தங்களது பாதையின் வழியில் எங்களை மேலும் வலுப்படுத்துகின்றன.
நமது அன்பு தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும், புகழுக்கும், தொடர்ந்து பங்களிக்கும் வகையில் தாங்கள் வலிமை மற்றும் விவேகம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள்புரியட்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.