Times of Puducherry

புதுச்சேரியில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 9:49 PM
heroic-tribute-with-21-gun-salute-in-pud

புதுச்சேரியில் காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்

அந்த வகையில் புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி, கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று, காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்‌ தூவி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து காவலர் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டனர்.

புதுச்சேரியில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்

முன்னதாக, கடந்த ஓராண்டில் பணியின்போது உயிர்நீத்த 9 காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம் காவல்துறை இயக்குநர் ஷாலினி சிங், துணை‌ இன்ஸ்பெக்டர் ஜெனரல் சத்தியசுந்தரம்,முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top