Times of Puducherry

மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.10 கோடியில் விடுதிகள் 

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 4:24 PM
mahatma-ghandhi-bds-hostel-const-students-inaugural-cm

கோரிமேடு மகாத்மா காந்தி பல் மருத்தவக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி டீன் கென்னடி பாபு வரவேற்றார். அரசு கொறடா ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு சேர்க்கை சான்றிதழ் வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

இந்த கல்லூரி துவங்கிய போது, 40 மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் இருந்தன. ஆனால் தற்போது 125 மாணவர்கள் வரை சேர்க்கை நடக்கிறது. நமது கல்லூரி அகில இந்திய அளவில் சிறந்த கல்லுாரிகளில் 23வது இடத்தில் இருக்கிறது. இந்த படிப்பில் அரசு வேலையை எதிர்பார்க்க தேவையில்லை. நீங்களே உங்களுடைய வேலையை உருவாக்கி கொள்ளலாம். கல்லூரிக்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி ரூபாய் செலவில் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது.

நடமாடும் பல்மருத்துவ பஸ் சேவையும் நடந்து வருகிறது. ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 12 இடம் மட்டும்தான் தருவார்கள் தற்போது, அரசு மருத்துவ கல்லுாரி துவங்கப்பட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். நோயின் தன்மை குறித்து நோயாளிகளிடமோ அல்லது அவர்களின் உறவினர்களிடமோ கூற வேண்டும். அப்போதுதான் மேல் சிகிச்சைக்கு அவர்களை அனுப்பமுடியும் என கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top