Times of Puducherry
தமிழக பா.ஜ.க முக்கிய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தனது மத்திய இணை அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். எல்.முருகன்.2021 ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விவரிவாக்கத்தின்போது மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இது குறித்து எல்.முருகன் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில்:
பாரத மாதாவுக்கும் தமிழகத்திற்கும் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் சேவையாற்றியது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும். “தினக்கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றியது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது தான் “மக்களோடு மக்களாக களப்பணிக்குத் திரும்ப” விரும்புவதாகவும், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணியில் முழு நேரமாக ஈடுபட விரும்புவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். எல். முருகன் தமிழக பாஜக பிரிவின் முன்னாள் தலைவராவார், மேலும் அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் அவரது பதவிக் காலம் 2030 ஆம் ஆண்டு முடிவடைய இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தில் உடனடியாகப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
எல்.முருகன்.2021 ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விவரிவாக்கத்தின்போது மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த எல் முருகன், மீண்டும் மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்று மத்திய இணை அமைச்சராக பதவியில் இருந்தார். தற்போது அவர், தனது மத்திய இணை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.