Times of Puducherry

நல்ல நேரம் பார்த்தாவது புதுச்சேரியைக் காப்பாற்ற முதல்வர் வருவாரா? - ntk வேலவன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 7:15 PM
cm-should-take-proper-measures-to-safeguard-puducherry-questions-velavan-ntk

புதுச்சேரி முழுவதும் வெள்ளம் சூழ்ந்த பகுதியை முதலமைச்சரங்கசாமி பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் வேலவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

புதுச்சேரி மாநிலத்தில் புயல் மற்றும் கனமழை அச்சுறுத்தல் நிலவும் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் கவலையும் அதிகரிக்கின்றன. இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழலில், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேரடியாகக் களத்திற்கு வந்து, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டாமா? மக்கள் துயரத்தில் இருக்கும்போது, அவர்களின் குறைகளைக் கேட்பதற்கும், பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்கும், அரசு நிர்வாகத்தை முடுக்கிவிடுவதற்கும் இதைவிட முக்கியமான நேரம் வேறென்ன இருக்க முடியும்?

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றனவா? மழைநீர் தேங்கும் பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? அவசரகால மருத்துவ உதவிகள், பாதுகாப்பான தங்குமிடங்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் தயாராக உள்ளனவா? மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பாதிப்புகளை உடனடியாகச் சரிசெய்யத் தேவையான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனவா?, இவற்றை உறுதி செய்வது வெறும் நிர்வாக நடைமுறை மட்டுமல்ல மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் அடிப்படைக் கடமையாகும்.

நல்ல நேரம் பார்த்தாவது புதுச்சேரியைக் காப்பாற்ற முதல்வர் வருவாரா?

மக்கள் பேரிடர் அச்சத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் தலைமையும், துரிதமான செயல்பாடுகளும், பொறுப்பான நிர்வாகமும் அவசியம். முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்து, பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பு.

பேரிடர் காலத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களின் பாதுகாப்பிற்கே முதலிடம் அளிக்க வேண்டும். உயிரிழப்புகளைத் தவிர்ப்பது, பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது ஆகியவற்றில் எந்தவிதமான தாமதமும் இருக்கக் கூடாது.

மக்களைக் காப்பதே முதன்மையான பணி! மக்களின் பாதுகாப்பே அரசின் முதல் கடமை! புதுச்சேரி மக்களின் அச்சத்தைப் போக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், புயல் பாதிப்புகளைத் தடுக்கவும் அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதிகம் படித்தவை

  • October 26, 2026 • 8:11 PM

த.வெ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகலை திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ள நினைக்கும் எண்ணம் நிச்சயம் ஈடேறாது – ஸ்டாலின்

  • October 26, 2026 • 7:52 PM

அரசாணை வெளியிடப்பட்டு 17 நாட்கள் கடந்தும், துணைத்தலைவரின் பெயரை அரசு இதுவரை அறிவிக்காதது ஏன்? – வேல்முருகன் கேள்வி

  • October 26, 2026 • 7:33 PM

அர்னாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவசரக் கூட்டம்

  • October 26, 2026 • 7:15 PM

நல்ல நேரம் பார்த்தாவது புதுச்சேரியைக் காப்பாற்ற முதல்வர் வருவாரா? – ntk வேலவன்

  • October 26, 2026 • 6:51 PM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ.1,000 வழங்கப்படும் – ராஜவேலு அறிவிப்பு

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top