Times of Puducherry

அரசியல் ஆதாயம் பொதுமக்கள் பயன்படுத்திய நிழற்குடை அகற்றம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 9:03 PM
bus-shelter-removal-affects-public-negligent-authorities

திருச்சி–தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் உள்ள அணுகுசாலையில் பயணியர் நிழற்குடை அப்புறப்படுத்தப்பட்டதற்கு பொதுமக்கள் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருச்சி–தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் உள்ள அணுகுசாலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடை தற்போது அகற்றப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நிழற்குடை அகற்றப்பட்டதற்கான காரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுக நிர்வாகிகள் தலைமையில் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து வந்த திருவெறும்பூர் போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிழற்குடை அகற்றப்பட்டதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தனர்.

அந்த பேருந்து கொட்டகைக்கும் பின்புறம் ஜவுளிக்கடை திறக்க உள்ளதாகவும், அந்த ஜவுளி கடைக்கு இந்த பயணியர் நிழற்குடை இடையூறாக இருப்பதாகவும் அதை அகற்ற சொல்லி அந்த கடை உரிமையாளர் நகாயில் NAHI மனு அளித்ததின் பெயரில் அகற்றப்பட்டதகவும் கூறப்படுகிறது.

இந்த உண்மை நிலவரத்தை அறியாமல் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி மாமன்ற உறுப்பினர் செந்தில் மீது கையூட்டு பெற்றதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பற்றி தொடர்ந்து தவறுதலாக அவதூறு பரப்பி வருவதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டு காவல்துறை தலைவரிடம் மனு அளித்தார்.

திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; நான் கையூட்டு பெற்றதை சட்டமன்ற உறுப்பினர் நிரூபித்தால் நான் மாமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறிய பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அப்பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இது ஒருபுறம் இருந்தாலும், யாருக்கும், முன்பின் தகவல் தெரிவிக்காமல் நள்ளிரவு நேரத்தில் பஸ் ஸ்டாப்பை இடிக்க வேண்டிய அவசியம் தேசிய நெடுஞ்சாலைத்துறையினைருக்கு ஏன் வந்தது? அப்புறப்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் பயணிகள் அமரும் இருக்கைகள், ஸ்டீல் ரூஃப், போன்ற பொருட்கள் ஏன் அருகிலுள்ள பில்டிங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது? கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஒரே நாளில் வேகமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறையினர் ஏன் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்துவதில்லை?
பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிழற்குடையை ஒரு தனியார் நிறுவனத்திற்காக அகற்றியதை கண்டு கொள்ளாமல் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை என்ன சொல்வது? என்பது போன்ற கேள்விக்கணைகளை அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடுத்து வருகின்றனர்.

நிழற்குடையினை திடீரென அகற்றி பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவர்களும் கொட்டும் மழையில் அப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் காட்சி அந்தோ பரிதாபத்திற்குரியது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top