Times of Puducherry
வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று (26.10.2026) ஆய்வு செய்தார்.
இலாசுப்பேட்டை, அவசரகால உதவி மையத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலர் சரத் சவுகான், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைச் செயலர்கள் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல காட்சிகள் மூலம் விளக்கினார்.
மழைநீர் வடிகால் வசதிகள், பாதுகாப்பு மையங்கள், மருத்துவ வசதிகள், மீட்புக் குழுக்கள், கால்நடை பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏனாம் மண்டல் அதிகாரி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.