Times of Puducherry
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி வேஷ்டி சேலைக்கு பதிலாக அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 18வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைக்கு பதில் பணமாக ரூ.1,000 வழங்கப்படும்- ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைக்கு பதில் பணமாக ரூ.1,000 வழங்கப்படும்.
அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 47,180 குடும்ப பங்கீட்டு அட்டைகளிள் உள்ள 1,33,890 (60,877 ஆண்கள் மற்றும் 73,013 பெண்கள்) பயனாளிகளுக்கு ரூ.1,000 வீதம் சுமார் 13 கோடி 38 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.