Times of Puducherry
திருபட்டினம் அருள்மிகு ஸ்ரீ வேர்க்கொல்லை மாரியம்மன், ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சமேத சடையா மடம் மற்றும் பிள்ளையார் கோவில் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடத்த அனுமதியும், அரசு நிதியுதவியும் கோரி முதல்வர் ரங்கசாமி அவர் இல்லத்தில் மனு வழங்கினார்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேர்க்கொல்லை மாரியம்மன், ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சமேத சடையா மடம் மற்றும் பிள்ளையார் கோவில் திருக்கோயில்களின் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கான அனுமதியும், அரசு நிதியுதவியும் வழங்கக் கோரி, புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்களை, நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் TKSM. மீனாட்சிசுந்தரம் முன்னிலையில், கோயிலின் நிர்வாக அதிகாரி . N. நெடுஞ்செழியன் மற்றும் . K. பாலாஜி ஆகியோர் நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினர்.
இத்திருத்தலங்களின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெறவும், பக்தர்களின் ஆன்மிகப் பணிகள் சிறக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.