Times of Puducherry
புதுச்சேரி கேரம் அகாடமி சார்பில் நடந்த 19-ஆம் ஆண்டு முதலமைச்சர்- பிரதமர் கோப்பைக்கான மாநில அளவிலான கேரம் போட்டியை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி கேரம் அகாடமி மற்றும் பாரதி பவுண்டேஷன் சார்பில் 19-ஆம் ஆண்டு முதலமைச்சர்-பிரதமர் கோப்பைக்கான மாநில அளவிலான கேரம் போட்டி துவக்க விழா இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி கேரம் அகாடமி நிறுவனர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் செயலாளர் சதீஷ், பாரதி பவுண்டேஷன் நிறுவனர் ராஜகோபால் ஸ்வாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன்,பெட்டிட்செமினார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கியராஜ், டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி தாளாளர் அருட்தந்தை தேவா அன்பு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வாழ்த்தினர்.
3 நாட்கள் நடக்கும் இந்த மாநில அளவிலான போட்டியில் 6 பிரிவுகளை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 5 வயது முதல் 60 வயது வரை உள்ள சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
வரும் 18ஆம் தேதி மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.