Times of Puducherry
தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் பிரச்னையில் கைது செய்யப்பட்ட தஞ்சை குற்றப்பிரிவு ஆய்வாளர் சுகுமாறன் ஜாமின் மனு தள்ளுபடியானதால், சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர், ரகுமான் நகரை சேர்ந்த சரவணன், பங்குதாரருடன் இணைந்து, ‘ஏ டு இசட்’ என்ற மருத்துவமனையை நடத்துவதுடன், அதன் இயக்குநராகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன், பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் சரவணன், திருச்சி ஐ.ஜி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், தன் வீட்டில் பங்குதாரர்களை வரவழைத்து, 5 கோடி ரூபாய் வரை பெற்று கொண்டது உறுதியானது.
அக்., 9ல் சுகுமாறன் கைது செய்யப்பட்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், ஜாமின் கோரி சுகுமாறன் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையில், நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா, மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமின் பெற, நெஞ்சு வலி நாடகமாடி மருத்துவமனையில் இருந்த சுகுமாறன், தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.