Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதியில் மழை பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் நேரில் ஆய்வு – போக்குவரத்து நெரிசலைச் சீரமைத்து, மழைநீரை அகற்ற நடவடிக்கை!
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் தட்டாஞ்சாவடி தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அசோக் ஆனந்த் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஈ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்ட அவர், தாமாக முன்வந்து போக்குவரத்தைச் சீரமைக்க உதவினார்.
தொடர்ந்து, ராஜாஜி நகர், வேலன் நகர், சின்னையன்பேட், லட்சுமி நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மோகன் நகர், சுப்பையா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, மழைநீர் தேங்கிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடியாக நீரை அகற்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அவரது தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் விரைவாக வடிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அப்பகுதிகளில் இயல்பு நிலை விரைவாகத் திரும்ப உதவியது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.