Times of Puducherry

மக்களின் உரிமையை பறித்த இந்திய தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 9:17 PM
gyanesh-resign-supporting-delhi-protest-by-trichy-youths-students

டில்லி போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் ரயில் நிலையம் முற்றுகை

எஸ்ஐஆர் திருத்தத்தில் மக்களின் உரிமையை பறித்த இந்திய தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரிஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய முகப்பில் இருந்து ஏஜஓய்எப், ஏஜஎஸ்எப் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 50 பேர் பேரணியாக ஜங்ஷன் ரயில் நிலையம் செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை கண்டோன்மென்ட் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top