Times of Puducherry

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யவும்! பாஜக தேசவிரோதிகளிடமிருந்து தேசத்தை காக்கவும்! மறியல் போராட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 8:06 PM
gyanesh-kumar-resignation-save-nation-cpi(m)

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யவும்! பாஜக தேசவிரோதிகளிடமிருந்து தேசத்தை காக்கவும் புதுச்சேரியில் மறியல் போராட்டம் இன்று மாலை நடந்தது.

ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கின் உச்சமாக, நாட்டின் 13 கோடி மக்களின் வாக்குரிமை அநியாயமாகப்பறிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கி, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்தெறிந்து கையும் களவுமாக மாட்டிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யவும்! பாஜக தேசவிரோதிகளிடமிருந்து தேசத்தை காக்கவும்! மறியல் போராட்டம்

தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தி சாலை ரயில்வே முற்றிலும் முடக்கப்பட்டு ஆன்லைன் சேவைகள், இணையதளம் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.‌ ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற ஜனநாயக வழியிலான கண்டன ஆர்ப்பாட்டத்தின் மீது மோடி அரசு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்; மூத்த தலைவர்களான பினராய் விஜயன், மாணிக் சர்க்கார், பிருந்தா காரத், கே.கே. சைலஜா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உண்மைச் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ‘ஸ்க்ரோல்’, ‘நியூஸ் லாண்டரி’ மற்றும் ‘தி வயர்’ போன்ற சுயாதீன ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் கைது என ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

மோடி அரசாங்கம் ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்பையும், ஒவ்வொரு தனிநபரையும் ஒடுக்க முயன்றாலும், இந்திய மக்கள் விழித்தெழுந்துவிட்டனர்; அவர்களை உங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய ஈடு இணையற்ற உரிமை. இன்று நாட்டின் பல பகுதிகளில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களைப் பறித்தவர்கள், புதுச்சேரி புதுச்சேரியில் சுமார் எட்டு சதவீத வாக்காளர் உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையும் கார்ப்பரேட் மற்றும் பாசிச சக்திகளுக்கு அடகு வைக்கும் இந்தச் சதியை முறியடிக்க வேண்டிய வரலாற்றுக்கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

மத்திய அரசின் இந்தத் திமிர்த்தனமான சர்வாதிகாரத்தையும், மக்களின் குரல்வளையை நெரிக்கும் அடக்குமுறையையும் புதுச்சேரி மண்ணிலிருந்து தடுத்து நிறுத்தவும், நமது உரிமைகளைப் பாதுகாக்கவும் புதுச்சேரி மக்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவரும் இந்த மக்கள் திரள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top