Times of Puducherry
விளையாட்டு மைதானத்தை மனை பட்டாவாக பிரித்து கொடுப்பது வேதனை அளிக்கிறது அரசு உடனடியாக இதை கைவிட வேண்டும் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் மனு கொடுத்தனர் . அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தில் மொளப்பாக்கம் மற்றும் எம். குச்சிபாளையம் கிராமம் அமைத்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று கூடி ரங்கசாமி சந்தித்து அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் 70 குழிக்கு மேல் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவ்விடத்தை அரசு கையகப்படுத்தி விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம் ஆகியவசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியுள்ளனர். நிலத்தை மீட்டு விட்டு வாருங்கள் கேட்டதை செய்து கொடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
சம்பந்தப்பட்ட நபரிடம் இளைஞர்கள் அணுகி அவரும் நிலத்தை பொதுப்பயன்பாட்டிற்க்கு ஒப்படைத்தார். கிராமத்தினர் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து செப்பனிட்டு விளையாட்டு மைதானத்தை அமைத்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடும் மைதானம் கலாச்சார மற்றும் பண்பாட்டு நிகழ்வு கூடலின் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் பொது பயன்பாட்டில் உள்ள இடத்தை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச குடிமனை வழங்க சட்டமன்ற உறுப்பினர் செயல்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் உண்மை நிலைமையை தெரிவிக்காமல் மாநில முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறைக்கும் தவறாக வழி நடத்தியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பொது பயன்பாட்டில் இருந்த இடத்தில் 31 மனைகள் பிரிக்கப்பட்டு 26 மனைப்பட்டா மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில் பொதுநலன் கருதி R.முருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.W.P.No: 9422 / 2026 எண்னிட்ட வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தல் படி பார்வை ல் கண்ட 13.04.2026 தேதியிட்ட மனு உயர்திரு.மாவட்ட ஆட்சியர் மற்றும் எதிர்மனுதாரர் அவர்களுக்கு அளிக்கப்பப்பட்டுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் திரு.முருகன் அவர்கள் உயர் நீதிமன்றத்தை 8.9.2026 அணுகினார்.
மேதகு உயர்நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் 13.04.2026 தேதி இட்ட மனுதாரரின் கோரிக்கை மனு மீது உண்மை தன்மை ஆராய்ந்து சட்டத்தின கீழ் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவு தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. மேற்படி தீர்ப்பு நிலுவையில் உள்ளபோதே 02.10.2026ல் அவசர அவசரமாக காவல்துறையினர் துணையுடன் வருவாய்துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானம் உட்பட மனை அளந்து எல்லைக்கல்கள் நடப்பட்டுள்ளன. இச்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
கிராமத்தினரின் பொது பயன்பாட்டில் இருந்து வரும் இடத்தை தன்னிச்சையாக மனைகளாக பிரிப்பது நியாயமற்றது. மொளப்பாக்கம் கிராம: ஏரிப்பாக்கம் வருவாய் கிராமத்தில் கிராமத்தில் Rs.No 96/1B/2ல் 168 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரையான்புத்தூரில் Rs.No 7760 பயனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்கப்பட்டன. மேற்படி இடங்களில் இடத்தை அளந்து கல்நட்டு பயனாளிகளுக்கு இது வரை வழங்கப்படவில்லை. மேலும் மொளப்பாக்கத்தில் அவசர அவசரமாக பொது பயன்பாட்டில் இருந்த இடத்தை பயனாளிகளுக்கு பகிர்ந்து அளிப்பதன் நோக்கம் ஆழ்ந்த சந்தேகத்தை எழுப்புகிறது.
மேலும் பட்டா ஆவணம் வழங்கப்பட்ட நபர்களில் பெரும்பகுதியினர் சொந்த வீடு, நிலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.பராம மக்களின் பொது பயன்பாட்டில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டு மைதான வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவது அரசின் கொள்கைக்கு எதிரானதாகும்.
இந்நிலையில் பயன்படுத்தி மேற்படி தீர்ப்பு நிலுவையில் உள்ளபோதே 02.10.2026ல் அவசர அவசரமாக காவல்துறையினர் துணையுடன் வருவாய்துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானம் உட்பட மனை அளந்து எல்லைக்கல்கள் நடப்பட்டுள்ளன. இச்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
மொளப்பாக்கம், எம்.குச்சிபாளையம் கிராமத்தில் அரசு இடைநிலை பள்ளி உள்ளது. இடைநிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. ஆகவே தற்போது பயன்பாட்டில் உள்ள மைதானத்தை பள்ளி மாணவர்களும் பயன்படுத்த கூடியதாகவும், சிபிஎஸ்சி வாரிய விதியை உறுதி செய்ததாகவும் உறுதிப்படுத்திட வேண்டும். ஆகவே தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு தற்போதுள்ள விளையாட்டு மைதானத்தை பாதுகாத்திட வேண்டும். சர்வே எண் 131/4ல் வழங்கப்பட்ட மனை பட்டா உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.