Times of Puducherry

சரக்கு வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் அலுவலர்கள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 5:12 PM
goods-carrying-vehicle-drivers-affected-by-freight-collecting-officers-trichy

வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தி அபராதம் விதிப்பது வழக்கமானதுதான். ஆனால், திருச்சி-கரூர் சாலையில் அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு 2 பேர் வசூல் வேட்டை நடத்தியிருக்கும் சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;

திருச்சி-கரூர் சாலையில் செல்லும் தனியார் சரக்கு வாகன ஓட்டிகள் வாடகைக்கு பொருட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிடும் நிலையில் அந்த வாடகை ஓட்டுநர்களிடம் பண்டிகை காலங்களில் தங்களை சோதனை என்ற பெயரில் சாலையின் ஒரு புறம் நிறுத்தி காரார் வசூலில் சுங்கத்துறை, வணிகவரித்துறை என்ற பெயரில் அதிகாரிகள் ஈடுபடுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கோடி கோடியாய் சம்பாதிக்கும் பெரும் முதலாளிகளை விட்டுவிட்டு வாடகைக்கு வாகனங்களில் பொருட்களைக் கொண்டு செல்லும் எங்களைப் போல் உள்ள வாகன ஓட்டிகளை மரித்து வாய்ச்சவடால் விடும் அதிகாரிகளை என்ன செய்வது என்று வேதனைப்படுகின்றனர் வாடகை சரக்கு வாகன ஓட்டிகள். இப்படியான நிலையில்தான் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வணிகவரித்துறை என்ற வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஒரு சரக்கு வாகனத்தில் இரும்பு குழாய்களை கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்திய நபர்கள் குறித்து வாகன ஓட்டுனர் தெரிவிக்கையில், ரெண்டு பேரு சார்.. ஏதோ அதிகரிகள்னு சொல்லிட்டு வண்டிய மறிக்குறாங்க. பேப்பர் குடு, அது குடுனு கேட்கறாங்க.. எல்லாத்தையும் காட்டினாலும் பணம் கொடுத்தாதான் வண்டி நகரும்னு சொல்றாங்க” என புலம்புகிறார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று ராம் பிரகாஷ் எனும் வழக்கறிஞர் முழு விவரத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும், தூய சக்தி ஆட்சினு சொன்னாங்க.. இப்படியெல்லாம் கொள்ளை நடக்குதே! என கேள்வி எழுப்பியிக்கின்றனர். வழக்கறிஞர் ராம் பிரகாஷ் ஷேர் செய்திருக்கும் வீடியோவில், ஒரு வாகன ஓட்டியை இரண்டு பேர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். தடுத்து நிறுத்தியவர்களிடம் ராம் பிரகாஷ் சில கேள்விகளை கேட்கிறார்.

வாகனத்தை தடுத்து நிறுத்தியது நீங்கள்தானே! உங்களுடடைய ஐடி-யை காட்டுங்கள் என்று அசோக் கேட்கிறார். ஆனால், அந்த நபர் ஐடியை காட்ட மறுக்கிறார். “எனக்கு ஐடி கார்டு கிடையாது. நான் Ex சர்வீஸ் மேன். பெயர் எம்.செந்தில்குமார். நான் TEXCO அமைப்பில் டிரைவராக இருக்கிறேன். என்னுடைய துறையிலிருந்து எனக்கு வாகனங்களை நிறுத்த சொல்லி அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் வாகனங்களை நிறுத்தினேன்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அப்படியான அதிகாரம் யார் கொடுத்தது? ஐடி கார்டு எங்கே? யுனிபார்ம் எங்கே? நீங்கள் அரசு பணியாளரா? அப்படியெனில் ஐடி கார்டை காட்டுங்கள் என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். பதிலுக்கு வாகனத்தை மறித்த செந்தில் குமார் என்பவர், என்னுடைய அதிகாரி இதோ பக்கத்தில் இருப்பவர்தான் என்று கை காட்டுகிறார். அவர் பக்கம் திரும்பிய வழக்கறிஞர், வாகனத்தை மறித்த செந்தில் குமார் அரசு ஊழியரா? அரசால் பணி ஆணை பெற்றவரா? என்று கேள்வி எழுப்ப.. எங்களுடைய கார் அங்குதான் நிற்கிறது.. அங்கு வாங்க ஐடி கார்டை காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பிறகு வாக்குவாதம் முற்றுகிறது. முன்னாள் படை வீரராக இருந்தால்.. அவர் வாகனத்தை மறிக்க அதிகாரம் கொண்டவரா? ஐடி கார்டு இல்லை, யார் என்கிற தகவல் இல்லை.. அப்படியெனில் நீங்கள் வழிப்பறி செய்கிறீர்களா? என்று வழக்கறிஞர் கேட்க.. கடைசியில் மறிக்கப்பட்ட வாகனத்திலிருந்த ஓட்டுநரிடம் செந்தில்குமார் சமாதானம் செய்ய தொடங்கிவிட்டார். வாகனத்தை மறித்து நாங்கள் ஏதாவது தொந்தரவு செய்தோமா? என்று சைஸாக பேசி.. ஓட்டுநரை அனுப்பி வைக்க முயன்றார். இது தொடர்பான முழு விடியோவும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக வைரல் ஆகி வருகிறது. பலரும் வழக்கறிஞரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாகவும், எல்லா இடங்களிலும் இதேபோல வழக்கறிஞர்கள் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என்றும், அரசு இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து முன்னாள் வணிக வரித்துறை அதிகாரி சுந்தரபாபு தெரிவிக்கையில், ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு ஒரு பொருட்களை கொண்டு சென்றால் அதற்கு டெலிவரி நோட் ஒன்று கம்பல்சரி வாகனத்தில் இருக்க வேண்டும் அல்லது பணம் கொடுத்து வாங்கிய பொருட்களாக இருந்தால் அதற்கான முறையான பில் இருக்க வேண்டும். அதே நேரம் அந்த பில்லில் உள்ள தொகைக்கு ஒத்துவரும் பொருட்கள் அந்த வாகனத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வணிகவரித்துறைக்கு அதிகாரம் உண்டு. பெரும்பாலும் பொருட்களை கொள்முதல் செய்யும் நபர்கள் வரி கட்டாமல் பில் போடாமல் வாங்கிச் செல்வது பல இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. அதை கண்டுபிடிக்கவே இந்த வாகன சோதனை ஆங்காங்கே நடைபெறுகிறது. பெரிய லாரிகள் சிறு சிறு வாகனங்களில் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் பொழுது அந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதில் தவறில்லை.

ஆனால் முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் இந்த சோதனை நடைபெற வேண்டும். அந்த சோதனையில் aஈடுபடும் நபர்கள் கட்டாயம் தங்களுக்கான அடையாள அட்டை அணிந்து சோதனை செய்ய வேண்டும். ஆனால் சிலர் வாகன ஓட்டுனர்களையோ அல்லது அலுவல் உதவியாளர்களையோ கையில் வைத்துக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை சோதனை என்ற பெயரில் நிறுத்தி அவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவது வேதனை. குறிப்பாக இரண்டு லட்சத்திற்கு ஒரு கடையிலிருந்து பொருட்களை வாங்கிய நபர் ஒரு லட்சத்திற்கு மட்டும் வில் போட்டுவிட்டு டாக்ஸ் கட்டாமல் இரண்டு லட்சம் திற்கான பொருட்களை எடுத்துச் செல்லும்போது அந்த சோதனையில் ஈடுபடும் நபர் அந்த வாகனத்தில் உள்ள பொருட்களுக்கு வரி (டேக்ஸ்) விதிக்கும் அதிகாரமும், அபராதம் விதிக்கும் அதிகாரமும் உண்டு என்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top