Times of Puducherry

காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் சிவக்கொழுந்து வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 4:36 PM
free-cycle-distributed-school-students-of-Karaikal

காரைக்கால் சமூக நலத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சர் ராஜசேகரன் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக நலத்துறை இயக்குநர் முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் சிவக்கொழுந்து வழங்கினார்

இவ்விழாவில், அமைச்சர் சிவக்கொழுந்து மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். மிதிவண்டிகள் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் ஏற்படும் சிரமங்கள் குறைவதுடன், அவர்களின் பயண நேரமும் மிச்சமாகிறது.

காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் சிவக்கொழுந்து வழங்கினார்

இதன் மூலம் மாணவர்கள் தங்களது கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் சமூக நலத்துறையின் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top