Times of Puducherry

கலை மற்றும் பண்பாட்டு துறையில் காலியான பணிக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 8:38 PM
filling-posts-art-and-cultural-dept-cm

புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் காலியாக இருந்த 28 பணியிடங்களை நிரப்பும் வகையில், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் இன்று (16.10.2026) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் . பெ. ராஜவேலு கலந்து கொண்டார். கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி தேர்வாணையம் (PEA) மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கலை மற்றும் பண்பாட்டு துறையில் காலியான பணிக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்

அதன்படி, ஓவியர் பணியிடம் ஒன்று, இளநிலை நூலக உதவியாளர் பணியிடங்கள் 26 மற்றும் காட்சியக உதவியாளர் பணியிடம் ஒன்று என மொத்தம் 28 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. இறுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சர் அ. நமச்சிவாயம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், அரசுச் செயலர் (கலை மற்றும் பண்பாட்டுத் துறை) சுரேந்தர், இ.ஆ.ப., கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் சக்திவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் துறையின் நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top