Times of Puducherry

மகனை ஸ்கேட்டிங் நாயகன் ஆக்கும் கனவுகளோடு சென்ற குடும்பம்கார் மோதி மூன்று பேரும் பலி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 4:07 PM
family-loses-3-members-inaccident

புதுவை குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41) இவரது மனைவி குணவதி (வயது 32) இவர்களது மகன் கீர்த்தி குருபரன்
(வயது 8) இவர்கள் கடந்த 18 ம் தேதி கீர்த்தி குருபரனை ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்காக புதுச்சேரி திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள இரும்பை சந்திப்பு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சாலையோரமாக கீர்த்தி குருபரன் ஸ்கேட்டிங் பயிற்சி செய்தார். பயிற்சி முடிந்து மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் குணவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தமிழ் மற்றும் கீர்த்தி குருபரன் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி குருபரன் உயிரிழந்தார், தமிழ்மணி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே உயிரிழந்த தமிழ்-குணவதி தம்பதியினருக்கு கீர்த்தி குருபரன் தவிர 6 வயது ஆண் மகன் ஒருவரும் உள்ளார். தாய் தந்தையர் மற்றும் சகோதரனை இழந்து அனாதையாக இருக்கும் அவர் தற்போது தனது உறவினர் பராமரிப்பில் இருந்த வருகிறார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய காரைக்கால் வரிச்சிக்குடியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாலையோரம் பயிற்சி செய்யும் நிலை ஏன்? பாதுகாப்பான விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டியது அரசின் கடமை அல்லவா? ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இடையே நிலவும் மோதல்கள், முறையான பயிற்சி வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகளும் கவனிக்கப்பட வேண்டாமா? இவைதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று விசாரணையின்றி முடிவெடுக்க முடியாது. ஆனால் இத்தகைய ஆபத்துகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இனி ஒரு உயிர்கூட இழக்கப்படக் கூடாது. இந்த மூன்று உயிர்களின் இழப்புக்கு யார் பதில் சொல்வார்கள்?.

அதிகம் படித்தவை

  • October 21, 2026 • 4:38 PM

முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

  • October 21, 2026 • 4:25 PM

125 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 25 நாள் வேலை வழங்க ரூ.9,192 கோடி தேவை:அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை – அன்புமணி இராமதாஸ்

  • October 21, 2026 • 4:07 PM

மகனை ஸ்கேட்டிங் நாயகன் ஆக்கும் கனவுகளோடு சென்ற குடும்பம்கார் மோதி மூன்று பேரும் பலி

  • October 21, 2026 • 1:59 PM

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வழி முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்தல் பற்றிய கருத்தரங்கு

  • October 21, 2026 • 1:43 PM

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு – வைத்திலிங்கம்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top