Times of Puducherry

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
17 Oct 2026 • 7:42 PM
eve-of-kalam's-b'day-300-palm-trees-planted-veerampattinam

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ஏற்பாட்டில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமைக் கனவுகளை நினைவாக்க, ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவாக, புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் 300 பனை விதைகள் குடும்பத்துடன் விதைக்கப்பட்டது.

கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்

காலை 6:00 மணியிலிருந்து மதியம் 1:30 மணி வரை இயக்கத்தின் நிறுவனர் இரா.இராஜா, முனைவர் க.ரேகா, தமிழ்க்கனல் க.இராமகிருட்டிணன் அரசுப் பள்ளி மாணவர்கள் இரா.சித்தார்த் இரா.இசை குடும்பத்தினர் மட்டும் 300 குழிகளைத் தோண்டி பனை விதைகளை நடவு செய்தனர்.

மோசமான இயற்கை மாற்றத்தை உலகம் எதிர்கொண்டு இருக்கின்ற இந்த தருணத்தில் இந்தியக் குடிமக்களாக பொறுப்பு நிறைந்த இயற்கைப் பணி இழை அறுபடாமல் தொடரும் என்று குடும்பத்துடன் உறுதியேற்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top