Times of Puducherry

ஞானேஷ்குமாரே பதவி விலகு! சிறப்பு தீவிர வாக்குகள் திருத்தம் SIR முறையை ரத்து செய்!

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 6:17 PM
gyanesh-resign-withdrew-sir-protest-tomorrow-before-assembly-salem-reports

வாக்குதிருடன் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். 13 கோடி வாக்காளர் உரிமையை பறித்த SIR முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை சட்டமன்ற முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அ .மு .சலீம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பிஜேபி மோடி ஆட்சியில் நீதித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி வருகிறது. வாக்காளர் சிறப்பு திவீர திருத்தம் SIR எனும் பெயரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் புகார்களும் எழுந்துள்ளன.

13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர் உட்பட இதர இரண்டு சக ஆணையர்களைக் கொண்டது ஆகும். இரண்டு சக ஆணையர்களின் கருத்துக்களை ஆட்சேபனைகளை புறந்தள்ளி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக SIR முறையை கொண்டு வந்துள்ளார். இந்த ஞானேஷ்குமார், கேரள மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிபோது பல்வேறு ஊழல்புரிந்துள்ளார்.

பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். பாஜகவின் சொல்படி வாக்காளர் படிவம் 6-ஐ தன் இஷ்டத்திற்கு திருத்தி 13 கோடி வாக்காளர்களின் உரிமையை பறித்துள்ளார். இத்தகைய கொடுஞ்செயலை எதிர்த்து நாடே பெரும் கொந்தளிப்பில் இருக்கிறது. வாக்கு திருட்டுக்கு காரணமான தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்கள், இடதுசாரி இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் டில்லியில் ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தினந்தோறும் திரண்டு வீதியில் இறங்கி போராடுகின்றனர்.

நாடு முழுவதும் இந்தப்போராட்டத்தீ பரவிக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது மோடி அரசு அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறது. காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் 35000 பேரைக்குவித்து போராட்டத்தை அடக்க முயற்சிக்கிறது. புதுடில்லியில் இணையவசதி துண்டிப்பு, மெட்ரோ ரயில்கள் நிறுத்தம், டில்லிக்கு வரும் இரயில்கள் நிறுத்தப்படுவது போன்ற போராட்ட முடக்குதலை பிஜேபி அரசு செய்து கொண்டிருக்கிறது. பிஜேபி அரசின் அனைத்து அடக்குமுறைகளையும் சந்தித்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர் – இளைஞர் பொதுமக்கள் திரண்டு தீரமுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கோடிகோடியாக பணமழை கொட்டியதையும் இதனை தேர்தல் துறை கைகட்டி வேடிக்கை பாத்ததையும் பார்த்தோம்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரே பதவி விலகு, சிறப்பு தீவிர வாக்குகள் திருத்தம் SIR முறையை ரத்து செய், எனக்கோரி புதுச்சேரியில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருக என வேண்டுகிறோம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top