Times of Puducherry
புதுச்சேரி மாநிலத்தில் இஎஸ்ஐ (ESI) திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 740 தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவப் பயன்கள் மற்றும் பணப் பயன்களைப் பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை, 15 இஎஸ்ஐ மருந்தகங்கள் மற்றும் பணப் பயன்கள் வழங்குவதற்காக 6-இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் மண்டல வாரியக் கூட்டத்தை நடத்துவது மற்றும் புதிய வாரிய மண்டலத்தை அமைப்பது தொடர்பாக, தொழிலாளர் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இஎஸ்ஐ அதிகாரிகளுடன் இன்று சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மண்டல வாரியக் கூட்டத்தை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி மாநில அளவில் இஎஸ்ஐ சொசைட்டியை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழிலாளர் துறை செயலர் சுரேந்தர், புதுச்சேரி இஎஸ்ஐசி மண்டல இயக்குநர் தேவகி ராதாகிருஷ்ணா, மாநில மருத்துவ அதிகாரி டாக்டர் சுப்ரமணியன் மற்றும் துணை இயக்குநர் கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.