Times of Puducherry

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன நேரம் வெகுவாக குறைப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 8:06 PM
Devasthanam-darshan-timings-shortened

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வி.ஐ.பி.க்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வரிசைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வைகுந்தம் வரிசை அறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இலவச தரிசனத்துக்கு 12 முதல் 30 மணி நேரம் வரை ஆகும் நிலையில், தற்போது தரிசன நேரம் சுமார் 3 முதல் 4 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

இதனால், திருப்பதிக்கு வரும் சாதாரண பக்தர்கள் குறைந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top