Times of Puducherry
திருச்சியில் இருந்து கடலூர் சென்ற அரசு பேருந்தின் LED பெயர் பலகையில் திமுக குறித்த அவதூறு வாசகம் சர்ச்சையான நிலையில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் திமுகவினரை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.’எங்க உங்க அப்பாவையே காணோம்’, ‘ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி’, ‘கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்ட ஸ்டாலின் அங்கிள், கக்கூஸ் லீடர் உதயநிதி ஆகிய வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து கடலூர் சென்ற அரசு பேருந்தின் LED பெயர் பலகையில் திமுக குறித்த அவதூறு வாசகம் சர்ச்சையான நிலையில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஓட்டுநர், நடத்துநர்களின் கவன குறைவால் LED பெயர் பலகையில் அவதூறு வாசகம். பயணிகள் யாரேனும் அவதூறு வாசகங்களை பதிவேற்றியிருக்க வாய்ப்பு உள்ளது. வாசகங்களை ஓட்டுநர், நடத்துநர்கள் பதிவேற்றவில்லை என போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.