Times of Puducherry
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும், என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஜனாதிபதியை திமுக எம்பிக்கள் சந்தித்து மக்கள் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க எஸ் ஐ ஆர் ரத்து செய்து வாக்கு சீட்டு முறையை வேண்டும் கொண்டு வர வேண்டும் என மனு வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
SIR-ஐ முழுமையாக இரத்து செய்வது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து விசாரித்திடுவது,ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு அளிப்பது, EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது, SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.