Times of Puducherry

ஊசுடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 8:58 PM
dcc-leader-selection-consultation

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் கீழ், ஊசுடு மாவட்டத்தில் அடங்கியுள்ள ஊசுடு மற்றும் வில்லியனூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) தலைவரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (14.10.2026) மாலை 5 மணியளவில், P. கார்த்திகேயன், MLA அவர்களின் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) பார்வையாளரும், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான எம். நாராயணசாமி கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஊசுடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர், மாநிலக் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்டறிந்து, ஜனநாயக முறையில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தல் திட்டத்தின் (Sangathan Srijan Abhiyan) அடிப்படையில் உரிய முடிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top