Times of Puducherry

வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 6:07 PM
cyclone-preparedness-addressed-collector

வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதால் புதுச்சேரி மாவட்டத்தில் கனமழை, வெள்ளம், புயல், பலத்த காற்று, இடி மின்னல் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுச்சேரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

பொதுமக்கள் கீழ்க்காணும் பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளைத் தொடர்ந்து கவனித்துப் பின்பற்ற வேண்டும். கனமழை, புயல் மற்றும் இடி மின்னல் நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் இறங்குதல், குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல் மற்றும் செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வெள்ளநீர் தேங்கிய சாலைகளைக் கடக்கவோ, வாகனங்களை இயக்கவோ கூடாது. மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களில் குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டக்கூடாது. இவை நீர்வழிகளில் அடைப்பை ஏற்படுத்தி, தாமதப்படுத்துவதுடன், வெள்ள மழைநீர் வடிவதை பாதிக்கக்கூடும். எனவே, நீர்வழிகளைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பலத்த காற்று மற்றும் இடி மின்னலின்போது மரங்க மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் விளம்பபதாகைகளின் அருகில் நிற்கக்கூடாது. அறுந்து விழுமின்கம்பிகளைத் தொடவோ, அருகில் செல்லவோ கூடாது. வீடுகளில் குடிநீர், உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், மின்விளக்கு மற்றும் முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள்,
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பலவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் வழங்கும் எச்சரிக்கைகளைக்
கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்பவோ, பகிரவோ வேண்டாம். அவசர காலங்களில் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசு மீட்புப் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பொதுமக்கள் புதுச்சேரி பேரிடர் மேலாண்மை
ஆணையத்தின் https://psdma.py.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் SACHET செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம், பேரிடர் தொடர்பான
அதிகாரப்பூர்வ முன்னெச்சரிக்கைத் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பேரிடர்களால் பாதிக்கப்பட நேர்ந்தால், பொதுமக்கள், அரசின் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை
மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாக இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

பேரிடர் தொடர்பான அவசர உதவி மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள் 1077, 1070, 112 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மேலும், 9488981070 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் தகவல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, தங்களது உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை
உறுதி செய்வதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுச்சேரி மாவட்ட பேரிடர்
மேலாண்மை ஆணையத் தலைவர் குலோத்துங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top