Times of Puducherry
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலக இணைய குற்ற தடுப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி காவல்துறை, இணைய குற்றத் தடுப்பு காவல் நிலையம் சார்பில் இணைய குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு துணைநிலை ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுச்சேரி போலீஸ் ஹேக்கத்தான் 2026 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர், சைபர் மற்றும் முதியோர் ஒத்துழைப்பு திட்டம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி காவல்துறை இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ந. ரங்கசாமி, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காவல்துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங், காவல்துறை துணைத் தலைவர் சத்திய சுந்தரம், காவல்துறை உயர் அதிகாரிகள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.