Times of Puducherry
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் – சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்குப் பாராட்டுக் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தா சுக்லா தலைமையில், கடலூர் மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள், குற்ற வழக்குகளைத் திறம்படப் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டறிதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகள், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், காவல் துறையினர் தங்களது பணிகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, குற்ற வழக்குகளில் விரைந்து புலனாய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களுடன் நல்லுறவைப் பேணி, மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தின்போது, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள், குற்ற வழக்குகளில் திறம்படப் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டறிந்தவர்கள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த எதிரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த காவல்துறையினர் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றி, காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன் ரகுபதி, உதவி காவல் கண்காணிப்பாளர்கள் செல்வி. சத்ரியா கவின் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாலகிருஷ்ணன் திரு. ராதாகிருஷ்ணன் ரகுபதி, ராமலிங்கம் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.