Times of Puducherry
எஸ் ஐ ஆர் என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் போராடும் மாணவர்களின் போராட்டத்தில் ஒளிந்து கொண்டு இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு கண்டனத்திற்குறியதாகும் என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது :
15 ஆண்டுகாலம் மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சியை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியானது. எஸ் ஐ ஆர் என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் போராடும் மாணவர்களின் போராட்டத்தில் ஒளிந்து கொண்டு இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு கண்டனத்திற்குறியதாகும்.
அர்த்தமற்ற முட்டாள்தனமான போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை சந்திக்க காங்கிரஸ் கட்சியினுடைய செயல் தலைவர் ராகுல்காந்தி முயற்சி செய்தது நீதிமன்றத்தையே மிரட்டும் செயலாகும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு அதே பிரச்சனைக்காக நீதித்துறையை மிரட்டி பணிய வைக்க முடியாது என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
நடைபெற்ற தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களையும் ஆட்களையும் விலைக்கு வாங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாமலேயே முதலமைச்சராக ஆன பிறகு சட்டமன்ற உறுப்பினர் விலைக்கு வாங்கி அவரது பதவியை ராஜினாமா செய்து இவர் தேர்தலில் நின்றதை மறந்து விட்டார் போலும். அந்தத் தேர்தலில் ஒரு வீட்டுக்கு 2000 ஒரு வாக்காளருக்கு 4,000 பணம் கொடுத்து வெற்றி பெற்று பணம் இருந்தால் மட்டுமே இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற ஒரு தத்துவத்தை புதுச்சேரியில் முதன் முதலில் கொண்டு வந்தவர் திரு நாராயணசாமி ஆவார். எப்பொழுதுமே தனக்கொரு நியாயம் பிறருக்கு கூறு நியாயம் என்று ஒரு மகத்தான தத்துவத்தை வெளிப்படுத்துபவர் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் ஆவார்.
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எண்ணற்றத் திட்டங்களும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல்வேறு நல திட்ட உதவிகளும் தங்கு தடை இன்றி மக்களை சென்றடைய முதலமைச்சர் அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். அறிவிக்கப்படும் திட்டங்கள் காலத்தோடு பயனாளிகளை சென்றடையும் பொறுப்புள்ள மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக போதிய நிதிஆதாரம் இல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார் என குறை கூறி இருக்கின்றார். அறிவித்த திட்டங்கள் எது செயல்படுத்தவில்லை என்பதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆதாரத்துடன் எடுத்துக் கூற முடியுமா?
தற்காலிக சபாநாயகராக உள்ளவர் நிரந்தர சபாநாயகராக செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். என்னுடைய திறமை குறித்து நாராயணசாமியின் பாராட்டுக்கு மிக்க நன்றி என பதில் கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.