Times of Puducherry
முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை
புதுச்சேரி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை தொகுதியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் விநாயகம், பொதுச் செயலாளர் சங்கர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.