Times of Puducherry

திருச்சி மாநகராட்சி மைதானத்தில் வாரச்சந்தை; தவெக - திமுக மோதல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 11:44 PM
conflict-b/w-dmk-and-tvk-traditiona-weekly-open-air-market-trichy

திருச்சி மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் உள்ளது. இதன் அருகிலேயே மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் கோவில் உள்ளதுடன், இந்த மைதானத்தை பள்ளி குழந்தைகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்ததுடன் கோவில் விழாக்கள் நடத்தி வந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த இடத்தில் திடீரென்று தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி உள்ளே புகுந்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மாநகராட்சி இடத்தை சுத்தம்செய்து வாரசந்தை அமைக்க ஏற்பாடு செய்து வந்தனர். அந்த வகையில் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி மைதானத்தில் வாரச்சந்தை; தவெக - திமுக மோதல்

இந்நிலையில் மாநகராட்சி அனுமதி இன்றி மைதானத்தில் வார சந்தை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் என்ற விஷயம் பொதுமக்களிடம் பரவியது. இதையடுத்து தகவல் அறிந்து மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளாதேவி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு இருந்த தவெ.க நிர்வாகிகளிடம் திமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி சுத்தம் செய்கிறீர்களா?இந்த இடத்திற்கு எப்படி வார சந்தை அமைக்க அனுமதி கொடுத்தார்கள்.

திருச்சி மாநகராட்சி மைதானத்தில் வாரச்சந்தை; தவெக - திமுக மோதல்

மேயர், மாமன்ற உறுப்பினர் மற்றும் தொகுதி எம்.எல்ஏ. கே.என் நேரு ஆகியோர் ஒப்புதலின்றி அவர்களுக்கு தெரியாமல் எப்படி நீங்கள் இந்த இடத்தில் வாரச்சந்தை அமைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சரமாரியாக தவெக நிர்வாகிகள் வசம் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கேள்வி கேட்டனர். இதனால் தவெக நிர்வாகிகளிடம் திமுகவினர் பொதுமக்கள் இணைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென்று திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா தேவி மற்றும் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பிறகு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியதுடன், ஜேசிபிகொண்டு பணிகள் நடைபெற்றுவருவதை நிறுத்த உத்தரவிட்டனர்.

மேலும் இரு தரப்பினரும் மாநகராட்சி அலுவலகம் சென்று மாநகராட்சி கமிஷனரிடம் விஷயத்தை கூறி அதன் பிறகு பணிகளை நடத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top